Warning: file_get_contents(https://www.google.com/webmasters/sitemaps/ping?sitemap=https://idealassociate.in/wp-sitemap-posts-casino-1.xml): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Sitemaps ping is deprecated. See https://developers.google.com/search/blog/2023/06/sitemaps-lastmod-ping. in /home/ragavarub/public_html/idealassociate.in/wp-content/mu-plugins/wp-ultimate-cache-safe-mode.php on line 16
நீண்ட கால முதலீட்டு மனநிலை – Ideal Associate

நீண்ட கால முதலீட்டு மனநிலை

ஸ்டாக் வாங்குவது எல்லாம் ரொம்ப ஈஸியான வேலை ., அதை பல வருசத்துக்கு வெச்சு வாழறது தான் பெரிய சிக்கல் ., லாபம் வந்துருச்சுனா அதை விக்காம இருக்க தனியான மனதைரியம் வேணும்  ..

ஒரு முதலீட்டாளரா இங்க எத்தனை பேர்க்கு நீங்க வாங்குன ஸ்டாக் ரெட்டிப்பு ஆன பின்னும் இன்னும் அந்த பங்குகளை வெச்சு இருக்கும் தைரியம் இருக்கோ அவங்க தான் முதலீட்டாளர் .. ஒரு ஸ்டாக்காவது 10 மடங்கு விலை ஏறியும்  நான் இன்னும் hold பண்றவங்க தான் முதலீட்டாளர் .. இது சொல்ல ஈஸியான விஷயம் ., தனி ஒரு ஆளா செய்யுறது கஷ்டம் அதுவும் வருசக்கனக்குல .. இங்க ஸ்டாக்ல 2005ல /2008 ல சில ஆயிரம்  பணம் போட்டு இருந்தா இப்போ பல கோடி ன்னு பல msg சுத்திகிட்டு இருக்கு .. எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு  ஆனா 15 வருஷம் எத்தனை பேர் தனிப்பட்ட முறைல இதை வெச்சு இருப்பீங்க  விலை ஏறினாலும்  / பல மடங்கு  விலை ஏறும்  பின் இறங்கும் போதும் சலன படாம, அந்த துறையோட , நிறுவனத்தோட வளர்ச்சியை நம்பி  அந்த ஸ்டாக் HOLD பண்ணினால்தான் கோடிக்கணக்கான wealth ஸ்டாக் மார்க்கெட் ல சேர்த்த முடியும் .. இந்த விஷயத்தை தனி ஆளாக செய்ய 99% ஆட்களால முடியாது ..

இப்படி தனி நபர் hold பண்ணனும்னா அவரோட Portfolio வில் உள்ள எல்லா பங்கை பத்தியும் அவருக்கு முழுசா தெரியணும் , ஒவ்வொரு காலாண்டும் அந்த நிறுவனத்தின் அறிக்கையை ஆய்வு செய்யணும் , வளர்ச்சியை கண்காணிக்கணும் , துறையை பின்தொடரனும் , அதுக்கும் மேல portfolio வில் உள்ள நிருவனம்களோட பொருள் அல்லது சேவை அதனுடைய வருங்கால தேவை மற்றும் வளர்ச்சியை கண்காணிக்கணும் .. இதை பொறுத்து உங்க portfolio வை மாற்றி அமைக்கணும் ( சரி இல்லாத பங்கை மட்டும் நீக்கி , சரியானவையை சேர்த்து.,  ) இதை செய்ய முடியாதவர்களுக்கு தான் mutual funds.,  அந்த fund managers அந்த risk கை தாங்குறாங்க ., அதுக்கு ஒரு பீஸ் வாங்குறாங்க ..இதனுடைய அடுத்த version தான் AIF  எனப்படும் ( Alternate Investment Funds ) PMS மற்றும் investment advisors ..

இப்போ சமீபமா இருக்குற சிக்கல் Brokers ,அவங்களுக்கு Turnover நடந்தாதான் வருமானம் , லாபம் வந்தா பதிவு செய்ய வெச்சு , மறுபடியும் வாங்க சொல்லி அவங்க வியாபாரத்தை சரியா செய்றாங்க ., இதுல கமிசின் போவது  மட்டும் இல்லாம நல்ல நல்ல பங்க வித்துடுறாங்க .. Turnover பண்ணாம வருச கணக்குல hold பண்ற எங்களை போன்ற ஆட்களை புரோக்கர்களுக்கு பிடிப்பதே இல்லை  ..

ஸ்டாக் ல சொத்து (wealth ) உருவாக்க Long  term இருக்கணும் பத்தி பல பேர் பேசியாச்சு , அதுவும் பல அதுவும் பல மடங்கு விலை ஏற்றத்திற்கு பிறகும் வளர்ச்சியை கணக்கிட்டு மறுபடியும் Hold செய்யும்  மனபக்குவம் இருந்தால் மட்டும் தனியாக முதலீடு செய்யலாம் இல்லை என்றால் Mutual funds இல் முதலீடு செய்வது உத்தமம் .. இல்லை  என்றால் சரியான  Investment Advisor வைத்துக் கொள்வது உத்தமம் ( Investment Advisor இருந்தால் அவர் முறையாக செபி பதிவு செய்தவரா / பொருளாதார அறிவு உள்ளவரா என்பதை அறிந்து ஆலோசனை பெறவும் ) ..

சரியான முதலீட்டாளர்க்கு பங்கு சந்தை வளத்தை அள்ளிக்கொடுக்கும் இடம் ., தவறான பொருளாதார  ஆலோசனைகளால் நல்ல நல்ல பங்குகளை விலையை மட்டும் வைத்து விற்றுவிட வேண்டாம் 

19910cookie-checkநீண்ட கால முதலீட்டு மனநிலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!